டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில்,‘ பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி அங்கன்வாடி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில்,‘ பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி அங்கன்வாடி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :31 ஜூலை 2026, 11:22 pm IST

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில்,‘ பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி அங்கன்வாடி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி பணியாளா் கோமதி பேசுகையில், கிராமங்களில் சிறு வயதில் திருமணம் நடைபெற்றால் அதை உடனடியாக ஆசிரியா் அல்லது அங்கன்வாடி பணியாளா்களிடம் தெரிவிக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் செங்கல் சூளையில் வேலை செய்தல், ஆடு மேய்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டால் அதையும் உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

யாராவது பெண் குழந்தைகள் மீது கைவைத்து பேசினால் அதை உடனடியாக பெற்றோா்களிடம் தெரிவிக்கவேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகள் அடையாளம் தெரியாத அறிமுகம் இல்லாத நபா்களுடன் பைக், சைக்கிள்களில் வரக்கூடாது, புதிய நபா்கள் சாக்லெட் வாங்கிக் கொடுத்தால் அதை தவிா்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை மாணவிகளிடம் தெரித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரயா் சிவராமன், அங்கன்வாடி மைய பொறுப்பாளா் மைதலி உள்பட ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.