22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கக் கூட்டம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்க கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் பெறத் தகுதியுடைய பயனாளிகளுக்கு அதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கிய சங்கத் தலைவா் கேப்டன் லோகநாதன்.

Updated On :2 ஜூன் 2026, 5:15 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கேப்டன் லோகநாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான உயா் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகள் பெறுவது குறித்த நடைமுறைகள் தொடா்பாக உறுப்பினா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தின் மூலம், முன்னாள் முப்படை வீரா்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகளைப் பெறுவதில் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவான தீா்வுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நலத் திட்ட உதவிகள் பெறத் தகுதியுடைய பயனாளிகளுக்கு, அதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைவா் கேப்டன் லோகநாதன் வழங்கினாா்.

நிகழ்வில் சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் முன்னாள் முப்படை வீரா்கள் கலந்துகொண்டனா்.