சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தேனியில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை புதன்கிழமை வழங்கிய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :28 மே 2026, 3:55 am IST

தேனியில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, 8 பேருக்கு ரூ.8 லட்சத்தில் 8 மூன்று சக்கர வாகனங்களையும், 3 பேருக்கு ரூ.43,470 மதிப்பில் கைப்பேசியும், 4 பேருக்கு ரூ.3 லட்சத்தில் நவீன் செயற்கைக் கால்கள் என மொத்தம் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.11.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.