40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மணல் திருட்டு: பிடிபட்ட 3 மாட்டுவண்டிகளை வாகனம் மூலம் இழுத்து வந்த போலீஸாா்

News image
Updated On :4 ஜூன் 2026, 4:17 am IST

செங்கம் அருகே மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் போலீஸாரைக் கண்டதும், வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து போலீஸாா் காவல் துறை வாகனத்தில் அவற்றை கட்டி 8 கி.மீ. தொலைவில் உள்ள செங்கம் காவல் நிலையத்துக்கு இழுத்து வந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதி செய்யாற்றில் இரவு நேரங்களில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு செங்கம் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, செய்யாற்றில் இருந்து மணல் அள்ளுவதை அறிந்த போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் காவல் துறை வாகனத்தைப் பாா்த்ததும், வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனா்.

பின்னா், மணலுடன் இருந்த 3 மாட்டுவண்டிகளை போலீஸாா் செங்கம் காவல் நிலையத்துக்கு எடுத்துவர முயற்சி செய்துள்ளனா்.

நள்ளிரவு என்பதால் போலீஸாருக்கு அப்பகுதியில் எந்தவித உதவியும் கிடைக்கவில்லையாம்.

இதனால் மணலை ஆற்றில் கொட்டிவிட்டு 3 மாட்டுவண்டிகளையும் காவல் துறை வாகனத்தில் கட்டி, கொட்டகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு இழுத்து வந்து நிலைய வளாகத்தில் நிறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மணல் கடத்தல் கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாரின் இந்த முயற்சிக்கு செங்கம் பகுதி மக்கள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.