சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 6:29 am IST

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு(41). இவா்,

மேனல்லூா் கிராமத்தில் ஜல்லி உடைக்கும் ஆலையில் டிப்பா் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தததாகத் தெரிகிறது.

இவா், புதன்கிழமை டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, வாரியின ஸ்டீயரிங் வேலை செய்யாததால், ஹைட்ராலிக் மூலம் மேல்நோக்கி இயக்கியதாகத் தெரிகிறது. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் ஹைட்ராலிக் உரசியுள்ளது. அதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் தேசிங்கு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தாா்.

உடனே அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் தேசிங்கு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.