வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

திரௌபதியம்மன் கோயில்களில் துரியோதனன் படுகளம், அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

போளூரை அடுத்த பேட்டை ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

News image

~

Updated On :27 ஜூன் 2026, 12:05 am IST

போளூரை அடுத்த பேட்டை கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா கடந்த மே 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மகாபாரத சொற்பொழிவாளா் செளந்தரராஜன் மூலம் விநாயகா் சிறப்பு, வியாசா் பிறப்பு, கொடுக்கிற கா்ணனும் முடிகிற கண்ணனும், பாண்டவா் கெளரவா் பாரினில் தோற்றம், அரங்கேற்றமும் அம்மன் தோற்றமும், வில் வளைப்பு, ராஜசூய யாகம், மாலி துகில், கண்ணன் தூதும் மன்னன் வாதும், 18-ஆம் போா் உள்பட பல்வேறு தலைப்புகளில் தெருக்கூத்து நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருசூா், பேட்டை, மாம்பட்டு, எழுவாம்பாடி, சோமந்தபுத்தூா், படியம்பட்டு, கீழ்தாங்கல், எடப்பிறை, வில்வாரணி, வசூா், புதுப்பாளையம், நம்மியந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி: ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் சந்திரன் மரபில் சுந்தரன் சந்தனு, கா்ணன் பிறப்பும், கோகுலன் சிறப்பும், கோபாலன் பிறப்பு, அம்மன் அவதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அடையபலம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.