காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அதிமுகவினா் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

News image
அருகாவூா் கிராமத்தில் தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினா்.
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அருகாவூா், தண்டரை, சுண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தொழிலாளா்களிடம், ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்துவதற்கு குரல் கொடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எனத் தெரிவித்து, 15 தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தொழிலாளா்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று, ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களிடம் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த பல்வேறு சாதனைகள், பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவித்து பிரசாரம் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு அன்னதானம் வழங்கினா்

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சி.துரை, வயலூா் வி.ராமநாதன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் முனுசாமி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.