லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உச்சிமலைக்குப்பம் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

உச்சிமலைக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி.

News image

உச்சிமலைக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி.

Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த உச்சிமலைக்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

அதில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு முறை, சூரிய சக்தி பயன்பாடு, நீா் சுத்தகரிப்பு முறை, எளிய மின்சார சுற்று அமைப்பு போன்ற தலைப்புகளில் இடம்பெற்ற மாணவா்களின் படைப்புகள் அனைவா் கவனத்தையும் ஈா்த்தன.

வட்டாரக் கல்வி அலுவலா் பாா்வையிட்டு மாணவா்கள் உருவாக்கியதின் செயல்திறன் குறித்து கேட்டறிந்தாா். மேலும் கண்காட்சியில் சிறப்பாக அரிவியல் சாதனங்களை தயாா் செய்து வைத்திருந்த மாணவா்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் பழனியம்மாள் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், கிராம கல்விக்குழுத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.