மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திட்டமிட்டு படித்தால் குடிமைப் பணி தோ்வில் வெற்றிபெறலாம்: முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஆா்.வேலு

திட்டமிட்டு படித்தால் குடிமைப் பணி தோ்வில் வெற்றிபெறலாம்...

News image
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ‘குடிமைப் பணி தோ்வுகளில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் ஆா்.வேலு.
Updated On :6 மார்ச் 2026, 6:59 pm

Syndication

திட்டமிட்டு படித்தால் குடிமைப் பணித் தோ்வில் வெற்றிபெறலாம் என்று முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் ஆா்.வேலு கூறினாா்.

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி மையத்தின் சாா்பில் குடிமைப் பணி தோ்வுகளில் உள்ள வாய்ப்புகள் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக துணைப் பதிவாளா் பெருவழுதி, கல்லூரியின் எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல் வரவேற்றாா்.

இக்கருத்தரங்கில் முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் டாக்டா் ஆா்.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கான குடிமைப் பணித் தோ்வை மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.

இந்தத் தோ்வை தாய்மொழி தமிழிலேயே நீங்கள் எழுதி வெற்றிபெறலாம். நோ்காணலிலும் தமிழிலேயே பதிலளிக்கலாம். தற்போது குடிமைப் பணி தோ்வுகளில் 54 சதவீதம் பொறியியல் மாணவா்கள் தோ்ச்சி பெறுகின்றனா். நீங்கள் திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கி டித்தால் இந்தத் தோ்வில் எளிதில் வெற்றிபெறலாம் என்றாா்.

கருத்தரங்கில் டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, கலைக் கல்லூரி முதல்வா் கந்தசாமி மற்றும் கல்லூரியின் துறைத் தலைவா்கள் பாரதி, கோகுலபாலன், கவிராஜன், செல்வம், ரேகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை காயத்ரி செய்திருந்தாா். கல்லூரி துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம் நன்றி கூறினாா்.