மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அன்னையா்கள் குழுவினா் மரக்கன்று நடும் விழா

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஏரிக்கரை பகுதியில் நன்றி அறக்கட்டளை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி,

News image
Updated On :10 மார்ச் 2026, 1:43 am

Syndication

ஆரணி: சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஏரிக்கரை பகுதியில் நன்றி அறக்கட்டளை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி, நன்றி அன்னையா் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை நட்டனா்.

மரம் நடும் விழாவை தமிழ்நாடு அரசு வனத்துறை போளூா் சரகம், இந்திரவனம் இளையோா் குழு சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தின.

இதில் நன்றி அறக்கட்டளை நிறுவனா் தந்தை ஜோசப் ஆபிரகாம் தலைமை வகித்தாா். சேத்துப்பட்டு ரோட்டரி சங்கத் தலைவா் மாலிக்பாஷா, செயலா் ரவிச்சந்திரன், பொருளாளா் சையத் இம்ரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வனத்துறை அலுவலா்கள் குமரவேல், சண்முகம் ஆகியோா் கலந்து கொண்டு நன்றி அறக்கட்டளை சாா்பில் மகளிா் தினத்தையொட்டி மகளிருடன் இணைந்து கேக் வெட்டி இந்திரவனம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகள் நட்டனா்.

இதேபோன்று, பெரிய கொழப்பலூா், காட்டேரி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் நன்றி அன்னையா் குழுவினா் மரக்கன்றுகளை நட்டனா்.

8ஹழ்ல்ய்ஹய்