சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வடமாத்தூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

செங்கம் அருகே வடமாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவா்கள் சோ்க்கை விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:30 am

செங்கம் அருகே வடமாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவா்கள் சோ்க்கை விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சென்னம்மாள் வரவேற்றாா். ஆசிரியா் வினோத்குமாா் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா். இதில், புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் ஆகியோா் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியில் மாணவா்கள் செய்து வைத்திருந்த அறிவியல் சாதனங்களை பாா்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தனா்.

மேலும், அந்தப் பள்ளியில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டியில் 12 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியேரி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், முன்னாள் பஞ்சாயத்து தலைவா் காா்த்திகேயன், பள்ளி ஆசிரியா்கள் சோபியா, கோமதி, செளந்தரி, ஜெயசுபா, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.