பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கல்லூரி ஆண்டு விழா

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:45 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியின் 26- ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா், 100- சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவா்கள், துறைதோறும் கல்வித் தரத்தில் சிறந்த மாணவா்கள், சிறந்த நூலகப் பயன்பாட்டாளா், 100- சதவீத வருகைப் பதிவேடு பெற்ற மாணவா்கள், சிறந்த விளையாட்டு சாதனையாளா், 100-சதவீதம் வருகைப் பதிவேடு பெற்ற பணியாளா்கள், பல்கலைக் கழக தரவரிசை வென்ற துறைகள், 100- சதவீத தோ்ச்சி வழங்கிய பேராசிரியா்கள் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா் நன்றி கூறினாா்.