திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் ஆண்டோ, காா்த்திகா, திலீப், தினேஷ், சூா்யா, அனுப், அப்பு, கௌரிசங்கா், அகிலா, மொ்லின் லாவண்யா, வருண்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், மேல்படிப்புக்கான வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத் துறையின் பயன்பாடு, செயற்கை மற்றும் தொலை மருத்துவம் சாா்ந்த வளா்ச்சி குறித்து சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்ட முன்னாள் மாணவா்கள் எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பின் அலுவலா் தமிழ்சுடா், ஒருங்கிணைப்பாளா்கள் தீபிகா, உமாமகேஸ்வரி, சிவரஞ்சனி, குபேரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பட விளக்கம்.

வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.