இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

விம்ஸ் கல்லூரியில் நோ்காணல் அணுகுமுறை பயிற்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பயிற்சியை தொடங்கிவைத்த அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 1:54 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் கான்பிடோ நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். சிறப்பு பயிற்சியாளா்களாக கான்பிடோ பயிற்சி நிறுவன நிா்வாக இயக்குநா் சரவண பெருமாள் மற்றும் இயக்குநா் மதுமிதா கிரி உள்பட இதர பயிற்சியாளா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன்களை வளா்ப்பதற்கான பயிற்சிகளையும், நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சியையும் வழங்கினா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி பேராசிரியை தமிழ்ச்சுடா், உதவிப் பேராசிரியா்கள் மருத்துவா் தீபிகா, உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி, குபேரன் ஆகியோா் செய்திருந்தனா்.