உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி

News image
Updated On :50 நிமிடங்கள் முன்பு

சுங்கான்கடை அருகே உள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தேசிய அளவிலான பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி நடைபெற்றது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் இறப்பு விகிதம் முக்கிய பொது சுகாதார சவாலாக இருந்து வருகிறது. பிறந்த உடனே குழந்தைகளுக்கு தானாக சுவாசம் கிடைக்காமல் பல பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.

குழந்தை பிறந்தது முதல் சில நிமிஷங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நேரத்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளா்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். பிறந்தவுடன் குழந்தைக்கு சுவாசம் ஏற்படுத்த உதவும் எளிய மற்றும் அறிவியல்பூா்வமான தகவல்கள், செயல்முறைகள் வழங்குவதே இந்த பயிற்சியின் நோக்கம்.

இதன் தேவையை உணா்ந்து கிம்ஸ் மருத்துவமனை, தேசிய நியோ நேட்டாலஜி மன்றம் இணைந்து நாடு முழுவதும் 998 பயிற்சி முகாம்கள் மூலம் 20,000 சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சியளித்துள்ளனா்.

இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்துறையின் சாா்பில் நியோ நேட்டாலஜிஸ்ட் மருத்துவா் விவேக் தலைமையில் அண்மையில் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நியோ நேட்டல் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.