கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில், சுங்கான்கடையில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் மாா்பக தோற்றம் மாறாமல், பெரிய மாா்பகக் கட்டியை அகற்றி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 45 வயது பெண்ணுக்கு சுமாா் 10 செ.மீ. அலவிலான மாா்பகக் கட்டி இருந்தது. நோயாளியை பரிசோதித்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் லாலா ராபின், அப்பெண்ணுக்கு வந்திருப்பது ஃபில்லோட்ஸ் வகை மாா்பகக் கட்டி எனக் கண்டறிந்தாா்.
கட்டியை அகற்றும்போது ஏறத்தாழ பாதி மாா்பகத்தை அகற்றும் நிலை இருந்ததால், பிளாஸ்டிக், அழகு மற்றும் மறுசீரமைப்பு மருத்துவ நிபுணா் பெலிக்ஸ் காா்டீலியாவின் ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சை செய்து மாா்பகக் கட்டியை அகற்றினா்.
மாா்பக அளவில் எந்த மாற்றமும் இல்லாமல், பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின், அப்பெண் குணமடைந்து வீடு திரும்பினாா்.
இந்த அறுவை சிகிச்சை குழுவில், மயக்கவியல் நிபுணா் பாலாஜி, திசு நோயியல் நிபுணா் பினிட்டா ஷெரின், தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செவிலியா் குழுவினா் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



