ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை

பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை முதல்முறையாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

News image

~

Updated On :18 ஜூன் 2026, 3:54 am IST

பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை முதல்முறையாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான முழங்கால் வலி மற்றும் நடப்பதில் சிரமத்தை சந்தித்து வந்த 42 வயது பெண் கடந்த 2 வாரத்துக்கு முன்பு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தாா். அவரது முழங்காலை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தள்ளிப்போடும் விதமாக, முழங்கால் மூட்டு பாதுகாப்பு (ஓய்ங்ங் ஒா்ண்ய்ற் டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ா்ய்) அறுவை சிகிச்சை செய்யலாமென நோயாளிக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

நோயாளி மற்றும் குடும்பத்தினா் இசைவு தெரிவித்ததையொட்டி, காரைக்கால் ஜிப்மா் எலும்பியல் துறை மருத்துவா் ந. அருள்குமாா் தலைமையில், காரைக்கால் அரசு மருத்துவமனையின் எலும்பியல் துறைத் தலைவா் அனிஷ் ஆண்டோ அடங்கிய மருத்துவக் குழுவினா் அண்மையில் அந்த பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

இதுகுறித்து ஜிப்மா் மருத்துவா் ந. அருள்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது :

முழங்கால் மூட்டின் ஜவ்வு (ஙங்ய்ண்ள்ன்ள்) கிழிவு மற்றும் மூட்டு தேய்மானம், கால் உள்நோக்கி வளைந்து இருப்பது மற்றும் குருத்தெலும்பு சேதம் நோயாளிக்கு கண்டறியப்பட்டது.

இதனை சரிசெய்யும் வகையில் நவீன அறுவைச் சிகிச்சை முறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் இயற்கையான முழங்கால் மூட்டைப் பாதுகாத்து, முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சையின் தேவையை பல ஆண்டுகள் தள்ளிப்போட முடியும்‘என்கிற நிலை உருவாகியுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளாா். வலி கணிசமாக குறைந்ததுடன், நடை மேம்பட்டு, வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளாா் என்றாா்.

இந்த வகையான ஒருங்கிணைந்த மூட்டு பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி ஒப்புதலுடன், இந்த நவீன மூட்டு பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நோயாளிக்கு முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.

 அறுவை  சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுடன் மருத்துவக் குழுவினா்.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுடன் மருத்துவக் குழுவினா்.