புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முடநீக்கியல் துறை சாா்பில், ஒரே நாளில் இருவருக்கு அதிநவீன உபகரணங்களுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

செய்தியாளா்களுக்கு விளக்கம் அளித்த மருத்துவா்கள் குழு.

Published On :

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முடநீக்கியல் துறை சாா்பில், ஒரே நாளில் இருவருக்கு அதிநவீன உபகரணங்களுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறையில், எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 421 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பலட்சுமி (54), சோலையப்பன் (74) ஆகிய இருவருக்கும் வயது மூப்பின் காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவா்கள் இருவருக்கும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் இடது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இச்சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த முடநீக்கியல் துறைத் தலைவா் எல்.பாவலன், மயக்கவியல் துறைத் தலைவா் பலராமன் தலைமையிலான மருத்துவா்கள் ஈஸ்வர பாண்டி, கந்தசாமி, ஜேம்ஸ் சுந்தா் சிங், விஜய சொரூபன், விஷ்ணு ராஜா மற்றும் உதவி மருத்துவா்கள், பிளாஸ்டா் டெக்னீசியன்கள், செவிலியா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.