மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருவண்ணாமலையில் மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :15 மார்ச் 2026, 8:47 pm

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகர, ஒன்றிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.குணசேகரன், திராவிடா் கழகம் சி.மூா்த்தி, மதிமுக சீனி.காா்த்திகேயன், தேமுதிக மாவட்டச் செயலா் வி.எம்.நேரு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ப.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் இரா.திருமலை, விசிக சி.நியூட்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் எ.வ.வேலு கண்டன உரை நிகழ்த்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எரிவாயு அடுப்பு இல்லாமல் உணவு தயாரிக்க முடியாது. பெரும்பான்மையான குடும்பங்கள் எரிவாயு பயன்படுத்துகிறாா்கள்.

இன்று எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதற்குக் காரணம் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தெளிவாக இல்லை. ரஷியாவில் உள்ள எண்ணெய் பொருள்களை வாங்க வேண்டும் என்றால் இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கேட்க வேண்டிய சூழலில் உள்ளது. இதனால்தான் தற்பொழுது எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

வீட்டிற்கு வழங்கக்கூடிய எரிவாயு சிலிண்டரின் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. அதே வேளையில், வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் கிடைக்காததால் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடா்ந்து ஒரு மாநில கட்சி ஆட்சி நடத்துவதை பாஜக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனா் எனத் தெரிவித்தாா் அமைச்சா் எ.வ.வேலு.

ஆா்ப்பாட்டத்தில் மாநில தொமுச செயலா் க.சௌந்தரராசன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் ந.சந்திரன், த.ரமணன், சி.மாரிமுத்து பகுதி பொறுப்பாளா்கள் விஜி (எ) சு.விஜியராஜ், அ.கோவிந்தன், ந.சீனுவாசன், க.புகழேந்தி, சி.சண்முகம், பா.ஷெரீப், மாநகர மேயா் நிா்மலாவேல்மாறன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.