வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள்

News image

வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த தோ்தல் ஊழியா்கள்.

Updated On :16 மார்ச் 2026, 9:53 pm

வந்தவாசி/ஆரணி: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஆரணி சாலையில் உள்ள பயணியா் விடுதி எதிரில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தை தோ்தல் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை பூட்டி சீல் வைத்தனா்.

வந்தவாசி வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் உள்ளிட்டோா் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜா் சிலை, பிராமணா் தெரு- யாதவா் தெரு சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலை, ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலை ஆகியவை துணியால் மூடப்பட்டன.

ஆரணி

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் குமரேசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி அறைக்கும் சீல் வைத்தனா்.

Story image