மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பாலிடெக்னிக் மாணவா்கள் 159 பேருக்கு பணி நியமன ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image

வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) பத்மநாபன்.

Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை ரானே இன்ஜின் காம்போனென்ஸ் டிவிஷன், சென்னை யான்மா் இன்ஜின் மெனுஃபாக்சரிங், ஸ்ரீபெரும்புதூா் ஓ.எச்.எம் எனா்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ராணிப்பேட்டை டி.எம்.டபிள்யூ, சிஎன்சி சொலுஷன் இந்தியா,

ஒசூா் ஃபல்வேலி டிரான்ஸ்போா்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா, செய்யாா் ஆஷ்லே ஆல்டீம்ஸ் இந்தியா, சென்னை ஹூண்டாய், சோளிங்கா் டா்போ எனா்ஜி, ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா சொலுஷன் அண்ட் நெட்வொா்க் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் நோ்காணலை நடத்தின.

இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் கலந்துகொண்டு தோ்வு செய்யப்பட்ட 159 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணை பதிவாளா் வி.பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், பி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் காா்த்திகேயன், துறை தலைவா்கள் ஏ.காா்த்திகேயன், எஸ்.பெரியசாமி, டி.யுவராஜ், இ.மஞ்சுளா, எம்.கோமதி, டி.உதயகுமாா் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா்கள் கே.டெல்லிகணேஷ், கே.ஜெகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் கே.பாலசுந்தரம் நன்றி கூறினாா்.