மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முத்தமிழ் மன்ற நூல் வெளியீட்டு விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

Syndication

செங்கம் கோல்டன் சிட்டி பகுதியில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் கவிஞா் இமையமதி எழுதிய, ‘வாசம் பிடித்து வயிற்றை நிரப்பியவள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முத்தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் ராமராகவன் தலைமை வகித்தாா். செங்கம் வட்ட தமிழ்ச்சங்கத் தலைவா் தனஞ்செயன் நூலக வாசகா் வட்ட கெளரவத்தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் பள்ளி ஆசிரியா் அரங்க.மணிமாறன் வரவேற்றாா்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியா் சாந்தமூா்த்தி கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு பின்னா் நூலில் எழுதப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பேசினாா்.

முத்தமிழ் மன்றச் செயலா் யோகன், கவிஞா்கள் தமிழ்மதி, கவியரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் நூலக வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், ஆசிரியா் ஆறுமுகம், பேராசிரியா் தமிழன்பிரபு உள்ளிட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த கவிஞா்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.