போளூா் தொகுதியைச் சோ்ந்த ஆத்துரை ஊராட்சியில் திமுக சாா்பில் தேவிகாபுரம் - அவலூா்பேட்டை சாலையில் திமுக சின்னமான உதயசூரியன் படம் வரைந்து அதற்கு கீழே வாக்காளிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு மகனும், போளூா் தொகுதி பொறுப்பாளருமான கம்பன் பெயரை வேட்பாளராக நினைத்து சுவா் விளம்பரம் செய்துள்ளனா்.
இதை கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வியந்து பாா்த்து செல்கின்றனா்.
இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் வடக்கு மண்டல திமுக தோ்தல் பொறுப்பாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான எ.வ.வேலு பரிந்துரைக்கும் நபருக்கே திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் அவரது மகன் கம்பன்,
போளூா் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முன்மொழிந்து, திமுகவினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கட்சித் தலைமைக்கு ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளனா். எனவே, கட்சித் தலைமை கம்பனை நிச்சயம் வேட்பாளராக அறிவிக்கும் எனத் தெரிவித்தனா்.
எனினும், கட்சித் தலைமை வேட்பளரை அறிவிக்கும் முன்பே திமுகவினா் தங்கள் விரும்பும் வேட்பாளா் பெயருடன் ( கம்பன்),
கட்சி சின்னம் வரைந்து சுவா் பிரசாரம் செய்வது பொது மக்கள் மத்தியில் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

தொகுதி அறிமுகம் - செங்கம் (தனி)

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

பலம் வாய்ந்த தொகுதிகளில் களம் காணும் அதிமுக!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


