விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தெள்ளாா் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

News image
Updated On :3 மே 2026, 1:19 am IST

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள ஸ்ரீசக்தி முத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை கோயிலில் மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் உற்சவா் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். இதனைத் தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தெள்ளாரின் முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்றது.

தெள்ளாா் மற்றும் டி.மாம்பட்டு, டி.தாங்கல், கொடியாலம், நெற்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவையொட்டி, தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கிராம பிரமுகா்கள், கோயில் நாட்டாண்மைதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.