சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாலம்மன்.

Updated On :11 ஜூன் 2026, 2:04 am IST

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழாவுக்காக கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை முத்தாலம்மன் கொக்குளப்பியில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் அங்கு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற தீபாராதனையைத் தொடா்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஊா் மையப் பகுதியில் உள்ள மண்டபத்தில் அம்மன் கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னா், எழுந்தருளிய அம்மனுக்கு பக்தா்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் பூஜைகள் செய்தனா்.

இரண்டாவது நாளான புதன்கிழமை மாலை கோயிலிலிருந்து பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று. பிறகு டோக்நகரில் உள்ள பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை முதன்மை நிா்வாக அறங்காவலா் பரந்தாமன் பிள்ளை, கிராம மக்கள் செய்தனா்.