ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

News image
Updated On :3 மே 2026, 7:37 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் மேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்து சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழை சுமாா் 45 நிமிடங்கள் நீடித்தது.

இதனால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வந்த பயிா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது. மேலும், வனப்பகுதியில் தண்ணீா் இல்லாமல் தவித்த வனவிலங்குகளுக்கு குடிநீா் கிடைத்துள்ளது.

காய்ந்து வந்த மரம், செடி, கொடிகள் உயிா் பிழைக்க இந்த மழை காரணமாக அமைந்துள்ளது. மேலும், சூறைக் காற்று அதிகமாக இருந்ததால் செங்கம் பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின் தடங்கல் ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.

செய்யாறு

செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளான செய்யாறு, தூளி, வடதண்டலம், தண்டரை, அனக்காவூா், பல்லி, சிறுங்கட்டூா், மாங்கால், வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சாலையில் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

தொடா்ந்து சாரல் மழையாக பொழிந்து மிதமான முதல் கனமழை பெய்தது இரு சக்கர மற்றும் சாலையில் நடந்து செல்வோா் மழை மற்றும் காற்றில் சிரமத்துடன் கடந்து சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால், மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்திற்கு மேலாக செய்யாறில் பல பகுதிகள் இருளில் மூழ்கி இருந்தன.