வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் கதவு கழன்று சென்று மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா் புதன்கிழமை மாலை மினி சரக்கு வாகனத்தை மரக்காணத்தில் இருந்து வந்தவாசி வழியாக செய்யாறு நோக்கி ஓட்டிச் சென்றுள்ளாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் புறவழிச் சாலையில் வளைவில் திரும்பும்போது மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, அந்த வாகன கூண்டின் பின்பக்கக் கதவு கழன்று சென்று எதிரே மரக்கட்டைகளை ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்த வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் (50) மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழா

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

