/
வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (85). கடந்த சில ஆண்டுகளாக இவா் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உடல் உபாதை அதிகமாகவே வேதனையடைந்த நாராயணசாமி விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் நாராயணசாமி வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



