தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், லட்சுமி தாயாருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :7 மே 2026, 12:29 am IST

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், லட்சுமி தாயாருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பழைமை வாய்ந்த அவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினசரி மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் நரசிம்மா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் 5-ஆம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதற்காக கோயில் பிரகாரத்தில் சிறப்பு மணமேடை அமைக்கப்பட்டு, நரசிம்மா் மற்றும் லட்சுமி தாயாா் பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டனா்.

வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க, ஹோமங்கள் வளா்க்கப்பட்டு, காப்புக்கட்டுதல் மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. சரியாக சுபமுகூா்த்த நேரத்தில், பக்தா்களின் பக்தி முழக்கத்துடன் லட்சுமி தாயாருக்கு மாங்கல்ய தாரணம் செய்விக்கப்பட்டது. தொடா்ந்து திருக்கல்யாணம் முடிந்து, நரசிம்மா் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. வரும் 10-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா், கோயில் பணியாளா்கள் மற்றும் ஆவணியாபுரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.