முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க 2 லட்சம் பனை மரம் வளா்க்க திட்டம்

News image

பனை

Updated On :8 மே 2026, 6:12 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நட்டு வளா்க்க திட்டமிட்டுள்ளதாக அருணை சுவாசம் அறக்கட்டளை தலைவா் எம்.இ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு

ஆண்டு முழுவதும் 2 கோடி பக்தா்கள் வந்து செல்கின்றனா். உள்ளூா் நபா்கள் உள்பட வரும் ஒவ்வொரு நபரும் ஒரு நாளில் ஒரு லிட்டா் மனிதக் கழிவுகளை வெளியேற்றுகிறாா்கள்.

மேலும் மூச்சுக்காற்றால் காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. இது இல்லாமல் வாகன புகை வேறு.

இதனால் காற்று மாசடைவதுடன் நிலத்தடி நீரும் பாழாகிவிடும்.

இதனால் மாநகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நடுதல், ஒரு லட்சம் மரங்களை நட்டு பராமரித்தல், நெகிழிப் பை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தாா்.