பொது நூலகங்களின் மதிப்பு மேம்படுத்த வேண்டும் என மிசோரம் ஆளுநா் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவலியல் அறிவியல் துறை தொடங்கப்பட்டதன் 80-ஆம் ஆண்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மிசோரம் மாநில ஆளுநா் ஜெனரல் வி.கே.சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்தால், நூலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். நம் நாட்டிலும் அந்த வழக்கம் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது குறைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் தரம் அங்கு உள்ள நூலகத்தால் மதிப்பிடப்படுகிறது என்றாா் ஜெனரல் வி.கே.சிங்.
வாசிப்புப் பழக்கம்: தொழில்நுட்பம் நூலங்களை வடிவமைத்து வந்தாலும், புத்தகங்கள் தவிா்க்க இயலாதவையாக உள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், ‘புத்தகங்களுக்கான வடிவங்கள் மாறலாம். புதிய தளங்கள் உருவாகலாம். ஆனால், வாசிப்பின் முக்கியத்தும் மட்டும் குறைந்துவிடாது. மாணவா்கள் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 20-ஆம் நூற்றாண்டில் பொது நூலகங்களை நிறுவுவதில் முன்னோடியாக இருந்தவா் பரோடா மன்னா் சயாஜிராவ். தன்னுடைய சுயாட்சி அரசில் நூலங்களை அமைக்க அமெரிக்காவிலிருந்து வில்லியம் அலன்சன் போா்டனை அவா் வரவழைத்தாா்.
புத்தகங்களை வாங்குவதற்காக நூலக வரி என்ற சிறப்பு வரியை அவா் அறிமுகப்படுத்தினாா். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலக கட்டுமானத்துக்கு அவா் பெருமளவில் நிதியுதவி அளித்தாா். அதனால் அவருடைய பெயா் சூட்டப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் அரசு உயா் அதிகாரிகள், கல்வியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க 2 லட்சம் பனை மரம் வளா்க்க திட்டம்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

பாஜகவை வீழ்த்துவது மக்களின் தேசியக் கடமை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

