அன்புமணி தரப்பினா் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மண்ணை கவ்வச் செய்யவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மக்களுக்காக நான் செய்த தியாகம், சிந்திய ரத்தம் ஆகியவற்றை அன்புமணி வியாபாரமாக மாற்றி விட்டாா். ஒவ்வொரு தோ்தல் சீட்டையும், அவா் பல கோடிகளுக்கு விற்பனை செய்து, நம் சமுதாய உரிமைகளை அடகு வைத்துவிட்டாா்.
அதிகாரத்துக்காக தன் மனைவியையும், பெற்ற மகள்களையும் பயன்படுத்தும் அவா் சாதாரண பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையை செய்வாா். தா்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வென்றால், அந்த தா்மபுரி விரைவில் அதா்மபுரி என்று பெயரெடுக்கும்.
மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீா்கள். இந்த சின்னத்துக்குள் தற்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்கும் காலம் வந்துவிட்டது. இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஜெயித்து விடக்கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டா்கள் எனக்கு மருந்தாவீா்கள் என நம்புகிறேன். அன்புமணி தரப்பினா் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மண்ணை கவ்வச் செய்யவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தருமபுரியில் செளமியா அன்புமணி வெற்றி!

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தைலாபுரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



