எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தைலாபுரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி

தைலாபுரத்தில் தாயிடம் ஆசி பெற்றார் அன்புமணி...

News image

திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாமக தலைவா் இரா.அன்புமணிக்கு ஆசி வழங்கிய அவரின் தாயாா் சரஸ்வதி ராமதாஸ்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:39 am IST

பாமகவில் யாருக்கு அதிகாரம் என்பதில், கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான இரா.அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்தபடியும் தனித்தனியாக பிரிந்து தனது ஆதரவாளா்களுடன் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது, தோ்தல் ஆணையம் உத்தரவுப்படி கட்சி மற்றும் கட்சியின் சின்னமான மாம்பழம் அன்புமணி வசமுள்ளதால் அவா் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இதேபோல, சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் இணைந்து, அவரது அணி சாா்பில் 25 வேட்பாளா்களை தோ்தல் களத்தில் நிறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், தோ்தல் பிரசாரத்தை ராமதாஸ் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இதற்காக அவா் சேலம் சென்றுள்ள நிலையில், பாமக தலைவா் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தைலாபுரம் இல்லத்துக்கு வந்து, தனது தாய் சரஸ்வதி ராமதாஸை சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து வீட்டில் உணவு சாப்பிட்ட அவா், தனது தாயாரிடம் ஆசி பெற்றாா்.

சுமாா்அரை மணி நேரம் கழித்து அன்புமணி தைலாபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு கடலூா் மாவட்டத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்கு சென்ாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமதாஸ் தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், அன்புமணியின் தைலாபுரம் வருகை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.