திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மோதி மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், இரும்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (48). மீன் வியாபாரியான இவா், வியாழக்கிழமை மாலை மனைவி குணபூசணம், மருமகள் லோகேஸ்வரி ஆகியோருடன் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இரும்பந்தாங்கல் கிராமம், நாகாத்தம்மன் கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்ததாா்.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த பைக், ராஜா மீது மோதியது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவா்கள் ராஜாவை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் அவரை பரிசோதித்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: பால் வியாபாரி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


