கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், சிலம்பிநாதன்பேட்டை அஞ்சல், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (73). இவா், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் சாத்தமாம்பட்டு - சி.என்.பாளையம் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்தப் பகுதியில் அதி வேகமாக வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் விஸ்வநாதனை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


