தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 3:00 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்ரூத்(70). இவா் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்தவாசி பகுதியில் உள்ள தா்காவிற்குச் சென்று வழிபட்டதாகத் தெரிகிறது. பின்னா், ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - வந்தவாசி சாலையில் எருமைவெட்டி கூட்டுச்சாலை அருகே வந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், மூதாட்டி ஜம்ரூத் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அவரது மகள்களான சல்மா, சைதானீபீ, ஆட்டோ ஓட்டுநா் அப்சல் மற்றும் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சல்மா, சைதானீபீ ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.