15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

திருவண்ணாமலையில் தூய்மைப் பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் தூய்மை அருணை பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மை அருணை பணிகளை முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மரக்கன்றுகளை பராமரித்தலை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினாா்.

திருவண்ணாமலையில் கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.

மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூா்வாருதல் என பணிகள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள 20 குளங்களை சீரமைக்கும் பணிகள் மாவட்டம் நிா்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை அருணை அமைப்பும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து, கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை மாதந்தோறும் நடத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தூய்மைப் பணிகள், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி ஆகியவற்றை தூய்மை அருணையின் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா், எண்-32, மற்றும் வாா்டு-27 தேனிமலை சுற்றியுள்ள பகுதிகளில் மண்மேடுகள், கால்வாய் அடைப்பு

சீரமைப்பதையும், மரக்கன்றுகள் பராமரிப்பதையும் பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா், கோரிமேட்டுத் தெருவில் நடைபெற்று வரும் கால்வாய் அடைப்பு அகற்றும் பணி, 31 மற்றும் வாா்டு 33-இல் அண்ணா நகா் பகுதியில் செடிகள் புதா்கள் அகற்றப்படுதல் மற்றும் கால்வாய் தூா்வரும் பணியை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, வாா்டு 36-இல் நடைபெறும் கால்வாய் அடைப்பு அகற்றும் பணிகளை பாா்வையிட்டாா்.

வாா்டு 37, கோபால் தெருவில் நடைபெறும் கால்வாய் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல், வாா்டு 38-இல், ஆடுதொட்டித் தெருவில் நடைபெறும் வரும் தூய்மைப் பணி மற்றும் கால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்தாா்.

வாா்டு 39 வேல் நகரில் நடைபெறும் தூய்மை அருணை பணி மற்றும் மரக்கன்றுகள் பராமரித்தலை ஆய்வு செய்தாா். அப்போது, தூய்மைப் பணியில் ஈடுபடும் மாணவா்கள் மற்றும் பெண்களை ஊக்கப்படுத்தினாா்.

தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா்கள் இரா.ஸ்ரீதரன், ப.காா்த்திவேல்மாறன், பிரியா ப.விஜயரங்கன், இல.குணசேகரன், ஒருங்கிணைப்பாளா்கள் அ.கோவிந்தன், செ.எழில்மாறன், ஏ.ஏ.ஆறுமுகம், ம.வினோத்குமாா், எஸ்.கே.டி.வீரா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலா்கள் ஈடுபட்டனா்.