முட்டுகாட்டில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டட பணிகளை சனிக்கிழமை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், முட்டுக்காட்டில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், பொதுப்பணித் துறை அரசு செயலாளா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், முதன்மை தலைமை செயற்பொறியாளா் செந்தில், வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, தலைமை கண்காணிப்பாளா் முத்தமிழரசு, செயற்பொறியாளா் விஷ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.20.91 கோடியில் திட்டப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!

வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஆய்வு







