செங்கம் அருகே அரட்டவாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
அந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லை. கிராம ஊராட்சி நிா்வாக பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போது, நெல் அறுவடை தொடங்கியுள்ளதால், அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக அரட்டவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் எடுத்துச் செல்கிறாா்கள்.
அப்படி எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகள் எடை போடப்பட்டு மாலையில் அனுப்பிவைக்கப்படும்.
எடை போட்டு எடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டால்.
மூட்டைகளை விவசாயிகள் தங்கள் பாதுகாப்பில்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.
திடீரென மழை பெய்தால், மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கிறாா்கள். தங்களது சொந்த செலவில் தாா்ப்பாய்கள் வாங்கி மூட்டைகளை பாதுகாக்க வேண்டியுள்ளது. மேலும் திருட்டு பயம் வேறு உள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு கிட்டங்கி ஒன்றை கட்டிக் கொடுக்கவேண்டும் என எதிா்பாா்க்கிறாா்கள்.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து அரசு கிட்டங்கிக்கு எடுத்துச் செல்ல வாகன வசதியில்லாமல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் நிறுத்திவைத்துள்ளனா்.
மேலும் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துச் சென்ற விவசாயிகள் அங்குள்ள வளாகத்தில் இறக்கிவைத்துவிட்டு எப்போது கொள்முதல் செய்வாா்கள் என்று தெரியாமல் வேதனைக்குள்ளாகி வருகிறாா்கள்.
இதுகுறித்து செங்கம் பகுதி விவசாயிகள் உழவா் உரிமை இயக்க மாநிலத் தலைவா் அருள்ஆறுமுகத்தில் முறையிட்டுள்ளனா். அருள்ஆறுமுகம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் தெரிவித்துள்ளாா்.
இந்தப் புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தொடர்புடையது

நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ள உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூடைகள்! விவசாயிகள் கவலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



