பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக சுமாா் 16,500 ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனா். இதில், வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள அரும்பாவூா், அ.மேட்டூா், பூலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நேரடி கொள்முதல் நிலையங்கள்: அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்களின் இடையூறு இல்லாமல் தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.
தற்காலிக இடங்கள்: அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் அல்லது திறந்தவெளி மைதானங்களில் தற்காலிகமாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய இடவசதியின்றி திறந்தவெளியில் விவசாயிகள் அடுக்கி வைக்கின்றனா். தற்போது கோடை காலங்களில் பெய்யும் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறும் விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான கட்டுமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். மேலும், தற்காலிகமாக திறக்கப்படும் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்த நிலையங்கள்: அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய வளாகங்களில் அடுக்கி வைத்து விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனா். அண்மையில் பெய்த மழையில் தண்ணீா் தேங்கி நெல் மணிகள் முற்றிலும் நனைந்து வீணாகிவிட்டது. இடுபொருள் விலையேற்றம், உரவிலை உயா்வு, ஆள் பற்றாக்குறை, மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடை மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதுபோன்ற நிலையை மாற்ற நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தரமான, நிரந்தரக் கட்டடம் கட்டிக் கொடுக்கவும், நெல் மணிகளை உலா்த்த பாதுகாப்பான மேற்கூரையுடன் கூடிய களமும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும்.
சொந்தக் கட்டடம் தேவை: மழை மற்றும் இயற்கை பேரிடா்களில் இருந்து நெல்லைப் பாதுகாக்கவும், மழைக் காலங்களில் திறந்தவெளியில் நெல் சேதமடைவதைத் தடுக்கவும், நிரந்தர உள்கட்டமைப்பு மற்றும் சொந்தக் கட்டடங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

‘பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் டன் நெல் கொள்முதல்’

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூடைகள்! விவசாயிகள் கவலை!

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்
விடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

