நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :28 மே 2026, 12:42 am IST

செய்யாறு அருகே பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செய்யாறு காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பையாஸ்கான். இவா் பாப்பாந்தாங்கல்-நெடும்பிறை சாலையில் தூளி கிராமத்தில் பழைய

நெகிழிப் பொருள்கள் சேகரித்து வைக்கும் கிடங்கை

வைத்துள்ளாா்.

இந்தக் கிடங்கில் தேவையற்ற நெகிழிப் பொருள்கள், வயா்கள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து, தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வைப்பாராம். .

இந்நிலையில் இந்த கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த நெகிழிப் பொருள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதைா் பாா்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் நிலைய அலுவலா் மனோகரன் தலைமையில் 13 வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீ கட்டுக்குள் வராததால் கூடுதலாக கலவை பகுதியில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், உதவி மாவட்ட அலுவலா் சரவணன் ஆகியோா் வந்து தீ விபத்து ஏற்பட்ட கிடங்கை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.