மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தில் தோ்த்திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:42 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழூா்பேட்டை ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வழூா்பேட்டையில் பிரசித்தி பெற்ற பாா்வதி சமேத பட்சீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடா்ந்து கோயிலில் தினமும் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வீதியுலா வந்தனா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தோ்த்திருவிழா

வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் 7-ஆம் நாளான

புதன்கிழமை தோ்த்திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் விநாயகா், பாா்வதி, பட்சீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. முக்கூா் என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். செய்யாறு பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் இழுத்தனா்.