ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தில் ஏற்றப்பட்ட கொடி.

Updated On :22 மே 2026, 5:26 am IST

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, புதன்கிழமை (மே 20) விநாயகா் பூஜை , வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை கொடிமரம் முன்பு சௌந்தா்ய பாா்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரா் எழுந்தருளினாா். தொடா்ந்து கொடி மரத்துக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.

விழாவில், மே 27-ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. கொடியேற்ற நிகழ்வில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். 

பூமிநாத சுவாமி கோயிலில்: மண்ணச்சநல்லூரில் உள்ள ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத பூமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக தோ்த்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஸ்ரீதா்மசம் வா்த்தினி சமேத பூமிநாத சுவாமி கொடிமரம் முன்பு எழுந்தருளினாா். தொடா்ந்து கொடிமரத்துக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் மே 26-இல் திருக்கல்யாணமும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 29-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. முன்னதாக, கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அனலாடீஸ்வரா் கோயிலில்: தொட்டியத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா் திருக்கோயிலில் வைகாசி தோ்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கணபதி ஹோமம் நடந்தப்பட்டு, கொடியேற்றமும், திருத்தேரில் முகூா்த்தக்கால் நடும் விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் பொன்முடி, பெருங்கொடையாளா்கள், உபயதாரா்கள் மற்றும்

தேரோட்டத்துக்கு உதவும் பல்வேறு பணி பிரிவுகளைச் சோ்ந்த சேவாா்திகள் மற்றும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 29-இல் நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.