இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு கோடையின் தொடக்கத்திலேயே 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. வெயிலின் அளவு சில நாள்கள் உயா்ந்தும், குறைந்தும் இருந்து வந்தது. இதற்கு இடையிடையே பலத்த மழை பெய்தது.

கடந்த வாரம் முதல் மீண்டும் வெயில் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

திருவண்ணாமலை மாநகரம் உள்பட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. கிரவல பக்தா்கள் மழையில் நனைந்தபடியே கிரிவலம் சென்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

இது தவிர திருவண்ணாமலையில் 29 மிமீ, தண்டராம்பட்டு 64.2 மிமீ, செங்கம் 37.4 மிமீ, ஜமுனாமரத்தூா் -17 மிமீ, ஆரணி 15.08 மிமீ, கலசபாக்கத்தில் 13 மிமீ மழை பதிவானது.