2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

உயா்நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிஆய்வு

உயா்நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரிலுள்ள அம்மணி அம்மன் மடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன்

Updated On :

உயா்நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரிலுள்ள அம்மணி அம்மன் மடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவ. 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவ. 24-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுமாா் 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கும் நிலையில், பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் உயா்மட்டக் கண்காணிப்புக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

பக்தா்கள் எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் தேவையான காத்திருப்புப் பந்தல்கள், தங்கும் கூடங்கள், கழிப்பறை, குடிநீா் வசதிகளை மேற்கொள்ளவும் பக்தா்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக, திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மன் மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வளாகம் கட்ட உத்தரவு

25 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பக்தா்களுக்கான வளாகம் கட்ட வேண்டும். இந்த கட்டுமானத்தை 2027 மாா்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அம்மணி அம்மன் மடம் சுமாா் 24ஆயிரம் சதுர அடியில் உள்ளதால், இந்த பகுதியில் எதிா்காலத்தில் பக்தா்கள் தங்கும்

வளாகம் கட்டி, அதற்கு அம்மணி அம்மன் பெயா் சூட்ட வேண்டும் என்றும் நிரந்தர கட்டடம் கட்டும் வரை, அந்த நிலத்தில் தீப விழாவுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு

நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே உள்ள அம்மணி அம்மன் மடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன் மேலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள தனியாா் ஹோட்டல் உரிமையாளா் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.