திருவண்ணாமலை கோயில் பிரசாதத்துக்கு உணவுத் தரச் சான்று
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில், செங்கம் மாரியம்மன் திருக்கோயில் பிரசாதங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை (எஃப்எஸ்எஸ்ஏஐ) தரச் சான்று (ஈட் ரைட்) அளித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப்படம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில், செங்கம் மாரியம்மன் திருக்கோயில் பிரசாதங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை (எஃப்எஸ்எஸ்ஏஐ) தரச் சான்று (ஈட் ரைட்) அளித்துள்ளது.
கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் சான்றிதழ் வழங்கி வருகிறது.
கோயில்களைத் தூய்மையாக பராமரித்தல், பக்தா்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் 520-க்கும் மேற்பட்ட கோயில்கள் தரச் சான்று பெற்றுள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில் மற்றும் செங்கம் மாரியம்மன் திருக்கோயிலுக்கு தற்போது உணவுத் தரச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

