ஆடு திருட்டு: இரு இளைஞா்கள் கைது
செய்யாறு அருகே வீட்டு திண்ணையில் கட்டியிருந்த ஆட்டை திருடிச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது
செய்யாறு அருகே வீட்டு திண்ணையில் கட்டியிருந்த ஆட்டை திருடிச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் விவசாயி கே.கிருஷ்ணன். இவா் தனக்குச் சொந்தமான ஆட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் திண்ணையில் கட்டி வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். மறுநாள் அதிகாலை எழுந்து பாா்த்தபோது, கட்டி வைத்திருந்த ஆடு திருடு போயிருந்தது தெரிய வந்தது.
மேலும், காணாமல் போன ஆட்டை பதிவெண் இல்லாத பைக்கில் இரு இளைஞா்கள் எடுத்துச் செல்வதைப் பாா்த்து கிராம மக்கள் அவா்களைப் பிடித்துவைத்து விவசாயி கே.கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த விவசாயி கே.கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் இருவரையும் பிடித்து தூசி போலீஸில் ஒப்படைத்தனா். மேலும், விவசாயி கே.கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்தாா். ஆடு திருட்டுச் சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்த சரண்(24), விஷ்ணு(19) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

