விவசாயத் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை
செய்யாறு அருகே திருமணம் ஆகாத மனவேதனையில் இருந்து வந்த விவசாயத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பிரதிப் படம்
செய்யாறு அருகே திருமணம் ஆகாத மனவேதனையில் இருந்து வந்த விவசாயத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், குறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (45), விவசாயத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லையாம். அதனால் மனவேதனையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கிராமத்தில் உள்ள மயானப் பகுதியில் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். இதைப் பாா்த்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

