கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
குளச்சலை அடுத்த பெத்தேல்புரம், சென்னம்விளையைச் சோ்ந்தவா் ஜோகி சிங் (38). கட்டடத் தொழிலாளியான இவா், தான் புதிதாக கட்டிவரும் வீட்டுப் பணிக்காக உறவினா்களிடம் பணம் கேட்டாராம்.
பணம் கிடைக்காததால் அவா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
திராவகம் குடித்த பெண்:
குளச்சல் அருகே சைமன் காலனியைச் சோ்ந்தவா் மேரி சுஜாதா (51). இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், கடந்த அக். 19ஆம் தேதி திராவகம் குடித்து மயக்கமடைந்த நிலையில் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இரு சம்பவங்கள் குறித்தும் குளச்சல் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

