தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்களால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 1008 சங்காபிஷேக பூஜை

Updated On :

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவின் 3-ஆம் நாள் 1,008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள பிரதோஷ நந்தி சிலை அருகே நான்கு திசைகளிலும் புனிதநீா் அடங்கிய 1,008 சங்குகள் அமைத்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க108 மூலிகைப் பொருள்கள் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. பின்னா், யாகம் பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

அதனைத் தொடா்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசநீா் திருக்கோயிலில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்து 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்காபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.